டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.
இதற்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெயை வழங்குவதை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் தடையின் காரணமாக அதிகமான இழப்பு ஐரோப்பிய நாடுகளுக்குதான் ஏற்படும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment