அம்மான்:ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸின் தலைவர் காலித் மிஷ்அல் ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ்வுடன் சந்திப்பை நடத்தினார்.
1999-ஆம் ஆண்டு மிஷ்அலை ஜோர்டானில் இருந்து வெளியேற்றிய பிறகு அவருடைய முதல் சுற்றுப் பயணமாகும் இது. காலித் மிஷ்அல் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஹமாஸ் குழுவினர் ஜோர்டான் சென்றுள்ளனர்.
முன்னர் கத்தர் இளவரசரும் செய்தி ஒலிபரப்பு அமைச்சருமான ஷேக் தமீம் இப்னு ஹமத் அல் தானியுடன் மிஷ்அல் தலைமையிலான ஹமாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அம்மானில் ஹமாஸ் அலுவலகம் திறப்பது உள்ளிட்ட காரியங்கள் குறித்து விவாதித்ததாக கருதப்படுகிறது. இப்பேச்சுவார்த்தை வரலாற்று சிறப்புமிக்கது என ஹமாஸுடன் நெருங்கிய எகிப்தின் இஃவானுல் முஸ்லிமூன் கூறியுள்ளது.
அரசியல் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு மிஷ்அலின் வருகை பயன் அளிக்கும் என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸமீ அபூசுஹ்ரி கூறியுள்ளார்.
1999-ல் ஜோர்டானில் மிஷ்அல் மீது மொஸாத் உளவாளிகள் நடத்திய கொலை முயற்சிக்கு பிறகு அரசியல் நிர்பந்தம் காரணமாக ஜோர்டான் அரசு மிஷ்அல் உள்பட நான்கு ஹமாஸ் தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment