மும்பை:ஒரு குழந்தையை தத்தெடுத்து உள்ள ஒரு தம்பதியினர், மீண்டும் அதே பாலினத்தைச் சார்ந்த இன்னொரு குழந்தையை தத்தெடுக்க சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுத்தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜி.கார்னிக் தனது தீர்ப்பில் கூறியது: இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு-ஜுவைனில்) சட்டம் 2008, ஏற்கெனவே தத்தெடுத்துள்ள தம்பதி மீண்டும் தத்தெடுக்கும் குழந்தையின் பாலினம் குறித்து எந்தவித சட்ட விதிகளையும் குறிப்பிடவில்லை.
தம்பதியினர் தாங்கள் ஏற்கெனவே தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் பாலினத்தை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம். தம்பதியினர் தத்தெடுக்க விரும்பும் பிரியங்கா என்ற குழந்தைக்கு இயல்பான இதய செயல்பாடு இல்லை என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் குழந்தையின் உடல்நிலை தத்தெடுக்கும் விஷயத்தில் குறுக்கிடாது. தன்னை தத்தெடுத்துக் கொள்ள அனுமதிப்பது குழந்தை பிரியங்காவின் விருப்பம் சார்ந்தது என்று தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டிரர்ரி என்பரும், ஷெனாய் என்ற வெளிநாட்டு வாழ் இந்தியரும் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியத் தம்பதியினர் ஆவர். இவர்கள் 2008-ல் பெண் குழுந்தையை தத்தெடுத்திருந்தனர். மீண்டும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைப்பதற்காக இந்தியன் அசோசியேசன் ஃபார் ப்ரமோஷன் ஆஃப் அடாப்ஷன் அண்ட் சைல்ட் வெல்ஃபெயர் என்ற அமைப்பு மூலமாக மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியபொழுது நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment