டெஹ்ரான்:அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷனின் மரணத்தின் பின்னணியில் செயல்பட்டது அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ரோஷனின் மரணத்திற்கு சி.ஐ.ஏ உத்தரவிட்டதோடு உதவியும் அளித்துள்ளது என்பதற்கான ஆதாரம் ஈரானுக்கு கிடைத்துள்ளது. ஆனால், ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
ஈரான் தலைநகரில் முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் பயணித்த காரில் மேக்னடிக் குண்டு இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஈரானின் அணுசக்தி துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இதற்கு முன்பும் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுடன் ஈரானுக்கு தூதரக உறவு இல்லாததால் சுவிஸ் தூதரகம் மூலமாக இக்கடிதம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.
ரோஷனின் கொலையை கண்டித்து சனிக்கிழமை டெஹ்ரானில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட பேரணி நடைபெற்றது.

0 கருத்துரைகள்:
Post a Comment