Wednesday, January 18, 2012

நாடுகடத்தல்:அபூ கத்தாதவுக்கு ஆதரவாக தீர்ப்பு

Court to rule on Qatada deportation
லண்டன்:பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்படும் ஐரோப்பாவின் பிரபல மார்க்க அறிஞர் அபூ கத்தாதாவை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஜோர்டானிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குற்றம் எதுவும் சுமத்தப்படாமல் பிரிட்டனில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அபூகத்தாதாவை ஒப்படைக்கவேண்டும் என ஜோர்டான் கோரிக்கை விடுத்திருந்தது.

கைதானவர்களை சித்திரவதை செய்து வாக்குமூலம் பதிவுச்செய்து தன் மீது ஜோர்டானில் வழக்கு பதிவுச் செய்துள்ளதாகவும், தன்னை ஒப்படைத்தால் அதே கதிதான் தனக்கு ஏற்படும் என்ற கத்தாதாவின் வாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம் பிரிட்டனின் கோரிக்கையை தள்ளுபடிச் செய்தது.

ஜோர்டான் வம்சாவழியைச் சார்ந்த அபூ கத்தாதாவின் உண்மையான பெயர் உமர் உஸ்மான் என்பதாகும். இவருக்கு ஜோர்டான் ஆயுள்தண்டனையை விதித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza