ஸன்ஆ:ஆயுதக் குழுக்களின் தாக்குதலும், அரசு எதிர்ப்பு போராட்டமும் தீவிரம் அடைந்துள்ள யெமன் நாட்டில் ஐந்து லட்சம் குழந்தைகள் மரணத்தின் வாசலில் உள்ளதாக குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு(யுனிசெஃப்) கூறியுள்ளது.
பட்டினி, ஊட்டச்சத்துக் குறைவு ஆகியவற்றின் மூலம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தளர்ந்துபோய் உள்ளதாக யுனிசெஃபின் பிராந்திய இயக்குநர் மரியா காலிவிஸ் ஸன்ஆவின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உணவுப் பொருட்கள், எண்ணெய் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. யெமனில் நடந்து வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்களும், தாக்குதல்களும் நெருக்கடியை இரண்டு மடங்காக ஆக்கியுள்ளது. 58 சதவீத குழந்தைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது என யுனிசெஃப் கூறுகிறது.
ஆப்கானிஸ்தானிற்கு அடுத்து சிசு மரணம் அதிகமான நாடு யெமன் ஆகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment