லிமா:பெரு நாட்டில் தனியார் மறுவாழ் வுமையத்தில் நடந்த தீ விபத்தில் 26 பேர் பலியாகினர். போதைப் பொருள்,மது ஆகியவற்றிற்கு அடிமையானவர்களுக்காக தலைநகரான லிமாவில் செயல்படும் க்ரைஸ்ட் ஈஸ்லவ் என்ற மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து நிகழ்ந்தது. நேற்று உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்தது. கடுமையாக காயமுற்ற ஆறுபேர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கீகாரமில்லாமல் செயல்படும் இம்மையத்தில் அதிகமான நபர்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. சிறைச்சாலையைப் போல இங்கு மனிதர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என சுகாதாரத்துறை அமைச்சர் ஆல்பர்ட்டோ தேஜதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment