இஸ்லாமாபாத்:மெமோ சர்ச்சையை தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஹுஸைன் ஹக்கானிக்கு பதிலாக பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டியின் பிரமுகரும், முன்னாள் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஷெரி ரஹ்மானை பாக்.அரசு நியமித்துள்ளது. ஷெரி ரஹ்மான் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் பாக்.பிரதமர் பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய தோழி ஆவார்.
பாகிஸ்தான் அரசை கவிழ்க்க அந்நாட்டு ராணுவம் முயலும் வேளையில் உதவுமாறு கோரும் கடிதத்தை ஸர்தாரி ஹக்கானி மூலமாக அளித்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதுக்குறித்து ஸர்தாரி ஹக்கானியிடம் விளக்கம் கேட்டார். இச்சம்பவம் வெளியானதால் பாக்.அரசு ஹக்கானியிடம் பதவி விலகுமாறு கோரியது. மெமோ ரகசியம் வெளியானது பாக்.அரசுக்கும், ராணுவத்திற்குமிடையேயான உறவை பாதித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment