டோக்கியோ:பூகம்பம் மற்றும் சுனாமியினால் அணுக்கதிர்களின் கசிவு ஏற்பட்டுள்ள ஜப்பானின் புகுஷிமா அணுசக்தி நிலையத்தின் விபத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஜப்பானைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரபல ஜப்பான் பத்திரிகையான ஜப்பான் டைம்ஸ் வீக்லியின் முன்னாள் எடிட்டர் யோய்ஷி ஷிமாஸு இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
புகுஷிமா அணுசக்தி நிலையத்திற்கான அணுசக்தி எரிபொருளில் இஸ்ரேலிய அரசு மோசடி செய்துள்ளதாக ஷிமாஸு கூறுகிறார். அமெரிக்காவின் ஹுஸ்டனில் இருந்து 2007-ஆம் ஆண்டு புகுஷிமாவுக்கு அனுப்பப்பட்ட அணுசக்தி தயாரிக்க தேவையான உபகரணங்களில் மிகச் சிறந்தவற்றை எடுத்துவிட்டு பதிலாக பழைய உபகரணங்களை இஸ்ரேல் வைத்துள்ளது என ஷிமாஸு குற்றம் சாட்டுகிறார். ஜப்பானுக்கும்,அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி பரிவர்த்தனைகளில் மத்தியஸ்தர் என பொய்க்கூறி இஸ்ரேல் தலையிட்டுள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டே இதனை நடத்தியுள்ளது என அவர் கூறுகிறார்.
சி.ஐ.ஏ முன்னாள் ஏஜண்ட் ரோலண்ட் வின்ஸெண்ட் கர்ணாபியிலிருந்து தான் இச்செய்தியை அறிந்தேன் என ஷிமாஸு கூறுகிறார். மேலும் அணுசக்தி கதிர்களின் கதிர்வீச்சு நடத்துவதற்கு முன்பு அணுசக்தி நிலையத்தின் கம்ப்யூட்டரில் இஸ்ரேல் வைரஸ் தாக்குதல் நடத்தியதாக ஹிஷாஸு கூறுகிறார்.
ஃபலஸ்தீன் நாட்டிற்கான கோரிக்கையை ஐ.நாவில் அங்கீகரித்த ஜப்பானின் நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட கோபம்தான் வைரஸ் தாக்குதல் என ஷிமாஸு கூறுகிறார்.
0 கருத்துரைகள்:
Post a Comment