கோவா:வடகோவா பாண்டா பகுதியில் உள்ள ஹிந்து தீவிரவாத இயக்கமான சனாதன் சான்ஸ்தா [SANATAN SANSTHA] தலைமை அலுவகத்தில் இந்திய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ நேற்று இரவு சோதனை நடத்தியது. இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கண்டெடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள இவ்வியக்கத்தை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு எடுத்திருக்கும் இவ்வேளையில் என்.ஐ.ஏ வின் இப்பரிசோதனை முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளிலும் இவர்களின் பங்கு கண்டுபிடிக்கபட்டிருந்தது. 2008-ல் தானே நகரில் உள்ள திரைஅரங்க்ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சனாதன் சான்ஸ்தாவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment