Saturday, October 8, 2011

அமைதிக்கான நோபல்:மூன்று பெண்களுக்கு பகிர்ந்தளிப்பு

nobel_08102011
ஆஸ்லோ:ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பெண்களுக்கு 2011-ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மகளிர் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வரும்  ஏமனின் தவாக்குல் கர்மான், லைபீரியாவின் அதிபர் எல்லென் ஜான்சன் சிர்லீஃப், லைபீரியாவின் லேமா க்போவீ மற்றும் ஆகிய மூவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

“பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக அகிம்சை முறையில் போராடி, அமைதியை நிலைநாட்டும் அரும்பணியை மேற்கொண்டதாற்காக இம்மூவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது,” என்று அமைதிக்கான நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது.

அமைதி நோபல் பெறும் மூன்று பெண்களில் ஏமனின் மனித உரிமை ஆர்வலர் கர்மான் ஜனநாயக ஆதரவு இயக்கத்தை முன்நின்று நடத்தி நடத்தி வருகிறார். இவர், அரசியலில் மட்டுமின்றி பத்திரிகையாளராகவும் செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லென் ஜான்சன் சிர்லீஃப் ஆப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரியவர்.

லைபீரியாவைச் சேர்ந்த மற்றொரு சேவகியான க்போவீ, அமைதிப் போராளியாக பெண்களின் உரிமைக்காக தன்னை அர்ப்பணித்து வருபவர்.

அமைதி நோபல் அறிவிப்பை வெளியிட்ட நோபல் கமிட்டி தலைவர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட், “சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் செல்வாக்கு பெற்றால் மட்டுமே உலகத்தில் ஜனநாயகத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியும்,” என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza