நியூயார்க்:மாநில அளவில் தன்னை வலுப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தற்போது தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்க ஆயத்தமாகி வருவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியுட்டது.
டெல்லி அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குஜராத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான முதலீட்டு வர்த்தகத்தை பயன்படுத்தி, தேசிய அளவில் மோடி முன்னேறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மோடி பி.ஜே.பி.யின் விருப்பமான ஒரு தலைவராக விளங்குவது மட்டுமல்லாமல் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபராகவும் திகழ்வதாக அக்கேபிள் தகவல் கூறுகிறது.
இருப்பினும், மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டால், மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் பி.ஜே.பி.கெதிராக ஒன்று சேரும் என்பதாகவும் அக்கேபிள் தகவல் தெரிவிக்கின்றது.
2005-ம் மறுக்கப்பட்ட அமெரிக்க விசாவினால், மோடி கடும் அதிர்ப்தியில் உள்ளதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதனால் அமெரிக்காவிற்கெதிராக அவர் செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment