கொல்கத்தா:மேற்குவங்காள சட்டமன்றத்தில் ‘சிறுபான்மையினர்களின் விவகாரம் மற்றும் மதரஸா கல்வி’ போன்ற தலைப்புகளில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. அபுதாஹிர் கான் கம்யூனிச ஆட்சியில் நடந்த வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ.விசாரிக்க உத்திரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரித்ததை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இது சம்மந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. அப்துர் ரசாக்முல்லாவும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர்,வக்ப் துறை மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிகழகம் ஆகிய துறைகளிலும் பெருமளவில் ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக 1996-ம் ஆண்டில், ஜோதிபாசு முதல்வராக இருந்த சமயத்தில் நீதிபதி கிடேஷ் ரஞ்சன் தலைமையில் வக்ப் முறைகேடுகளை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1997-ம் சமர்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில், மேற்கு வங்கத்திலுள்ள முக்கிய ஸ்தாபனங்கள் அனைத்துமே வக்ப் நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
ஷேவ் வால்லஸ் கட்டிடம், மேற்குவங்க தலைமைச் செயலகம், ராயல் கல்கத்தா கோல்ப் கிளப், டோள்லிகுங்கே கிளப், ஷேக்ஸ்பியர் சரணி நகரம் என மேலும் பல முக்கியாம் வாய்ந்த கட்டிடங்களும், நகரங்களும் வக்ப் நிலங்களாகும். இதன் மதிப்பு 1,500 கோடி ரூபாயை தாண்டுவதாகும் அக்குழு 1997ல் மதிப்பீடு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment