Sunday, September 11, 2011

ஊடகங்களில் கனவிற்கு விளக்கம் கேட்பதற்கு சவுதியின் மூத்த உலமா எச்சரிக்கை

imagesCAQ4IFBZ
ஜெத்தா:சவுதியா அரேபியாவை சேர்ந்த மூத்த உலமா முப்தி ஷேக் அப்துல் அஜீஸ் அல் அஷ்ஷெய்க் என்பவர் பொது மக்கள் தாங்கள் காணும் கனவிற்கு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளக்கம் கேட்பதை எதிரத்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்க்கு காரணம் 75% க்கும் மேலானோர் தாங்கள் காணும் கெட்ட கனவிற்கு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அனுபவமுள்ளவர்கள் என்றெண்ணி தங்கள் கனவிற்க்கான அர்த்தங்களை கேட்பதை பழக்கமாகவும், திருப்தியாகவும் கருதுகின்றனர். இப்படி அனுபவும் நிறைந்தவர்கள் என்று கருதப்படும் இவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி போதுமான அறிவு இல்லை என்று ரியாத்தில் உள்ள இமாம் துகி பின் அப்துல்லா மஸ்ஜிதில் வெள்ளிகிழமையன்று தான் நடத்திய பேருரையில் தெரிவித்துள்ளார்.

வளரும் தலைமுறைகள்  இது போன்ற நிகழ்ச்சியில் அதிகமாக பங்கெடுத்து கொள்வதை உணர்ந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும், சுன்னாவையும்  உறுதியாக பின்பற்றுபவராக இருந்தால் தாங்கள் காணும் கெட்ட கனவுகளை மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பதே சிறந்தது. அப்படி தாங்கள் காணும் ஒரு சில கனவுகளுக்கு விளக்கம் வேண்டும் என்றால் இஸ்லாத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற உலமாக்களிடம் விளக்கம் கேட்பதே உகந்தது என்றும் தெரிவித்தார். இது போன்ற தங்களின் கனவுகளை பற்றி மக்கள் அனைவரும் காணும், கேட்கும் ஒரு பொது ஊடகங்களில் சொல்வதன் மூலம் மற்றவர்களால் அவர்களுக்கு தீங்கு ஏற்படவே வாய்ப்பு உள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் பணம் சம்பாதிப்பதே நோக்கம், இதனால் ஊடகளுக்கு எஸ்.எம்.எஸ் செய்வதாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலும் அவர்களின் வர்த்தகமே பெருகுகிறதே தவிர மக்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் சவுதியின் ஊடங்களில் ஒளிபரப்ப அனுமதி இல்லை.

கடந்த ஜூலை மாதம் கனவுக்கு விளக்கம் அளித்த ஒருவருக்கு 2 வருட சிறைத் தண்டனையும், 300 கசையடியும் ரியாத் நீதிமன்றம் அளித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza