Thursday, September 15, 2011

அமெரிக்காவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

imagesCAE0DCGL
நியூயார்க்:அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீ்ழ் வசித்து வருவதாக அந்நாட்டு மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு 43.6 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வந்தனர். இது 2010-ம் ஆண்டு 46.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம்  உள்ளிட்ட காரணங்களால் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டு வருமானம் 11,139 டாலர் (ரூ.5லட்சம்) உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என கணக்கிடப்படுகிறது.

நடுத்தர வர்க்கத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லும் நிலைமை 6.4 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் இன்றி 2009-ல் 49 மில்லியன் மக்களும், 2010ம் ஆண்டு 49.09 மில்லியன் மக்களும் உள்ளனர். இது 16.03 சதவீதம் ஆகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza