Thursday, September 15, 2011

சமூக நீதியை வலியுறுத்தி டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் ‘சமூக நீதி மாநாடு’

imagesCAMEROJG
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு தேசிய அளவிலான “சமூகநீதி மாநாடு”  (SOCIAL JUSTICE CONFERENCE) ஓன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இம்மாநாட்டின் அமர்வுகள் முழுவதும் சமூகத்தின் நீதிக்கான போராட்டம் சம்பந்தமான கலந்தாலோசனைகள், கருத்தரங்கங்கள் நடைபெற இருக்கின்றன. இறுதியாக நவம்பர் 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்த மாநாடு நிறைவடையும்.

இந்த மாநாட்டிற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிரசித்திப்பெற்ற ராம்லீலா மைதானத்தில் வைத்து இம்மாநாடு நடைபெறவுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் கூறும்போது இம்மாநாட்டை நடத்துவதற்கான நோக்கம் சமூக மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மேலும் இந்தியாவில் வாழக்கூடிய எல்லாத் தரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடி பெற வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

“நீதியின் மூலம் தேசத்தை கட்டி எழுப்புவோம்” என்ற முழக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இம்மாநாடு அமையும் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza