அஹ்மதாபாத்:குஜராத் லோகயுக்தா விவகாரத்தில் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கெதிராக இருவேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முதல் வழக்கு ஜன சந்கார்ஷ் மஞ்ச சார்பாக ராஜேஷ் மங்கத் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘லோகயுக்தா நியமனத்திற்கு பிறகு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில் பிரதமருக்கு மோடி கடிதம் எழுதியுள்ளது ஜனநாயக மரபுகளை மீறுவது மட்டும்மல்லாமல் நீதிமன்ற அவமதிப்பாகும்’.
மற்றொரு வழக்கு ஆனந்த் யக்னிக் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘லோகயுக்தா சமந்தமாக ஒரு வழக்கு ஏற்கனேவே நிலுவையில் உள்ள நிலையில், லோகயுக்தா நியமனத்திற்கு எதிராக மற்றொரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’.
இவ்விரண்டு வழக்குகளும் இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
0 கருத்துரைகள்:
Post a Comment