ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் குர்நூல் மாவட்ட அதொனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி மாநில தலைமை செயலாளர் மற்றும் தலைமை காவல்துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கலவரத்தை தொடர்ந்து முதல்வர் தலைமை செயலகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி கலவரத்தை குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காவல்துறை தலை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் பிரசாத், காவல்துறை தலைமை இயக்குனர் தினேஷ் ரெட்டி மற்றும் முதல்வரின் சிறப்பு செயலாளர் சத்யநாராயணா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment