Monday, September 5, 2011

‘ஹெட்லியை ஒப்படைக்க கோருவது கண்துடைப்பு மட்டுமே’ – முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

04_nsa_772698f
டெல்லி:மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோருவது ஒரு கண்துடைப்பு என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறிய விவரத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

எம்.கே.நாராயணன் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தபோது தான் மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரி வந்தது.

ஆனால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அவரை ஒப்படைக்குமாறு நெருக்கடி தர வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் கூறியதாகவும், அதற்கு எம்.கே.நாராயணன், நாங்களும் உண்மையில் ஹெட்லியை எங்களிடம் தர வேண்டும் என்று நெருக்கவில்லை. நாங்கள் அப்படி கோருவது போல நடிக்கிறோம் என்று கூறிய விவரதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த திமோதி ரோமர் வாஷிங்டனில் உள்ள தனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய கேபிள் செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இந்த ரகசிய செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாக வற்புறுத்தினாலும் அதில் எங்களுக்கு உண்மையில் அக்கறை இல்லை. ஆனால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் கேட்பது போல வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், இந்தக் கோரிக்கைகளை வைத்து வருகிறோம் என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அனுப்பியுள்ள இன்னொரு கேபிளில், காஷ்மீர் தொடர்பான கொள்கையில் நாராயணனின் பங்கு பழைமைவாதம் மற்றும் ஆதிக்கமனப்பான்மை கொண்டதாக இருந்தது. அவ்வப்போது முட்டுக்கட்டையாகவும் அவர் செயல்பட்டு வந்தார். நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதன் மூலம், முற்போக்கு சிந்தனை கொண்ட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காஷ்மீர் பிரச்சனையில் கொள்கை முடிவு எடுப்பதில் முக்கிய இடத்திற்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza