Friday, September 2, 2011

ராம் தேவுக்கெதிராக என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு

ramdev
புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ். யோகாகுரு பாபா ராம் தேவுக்கெதிராகவும், அவரது ஹரித்துவார் ஆசிரமத்திற்கெதிராகவும் என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு தொடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக அந்நியச் செலாவணிச் சட்ட மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு இது.

அமெரிக்கா, பிரிட்டன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ராம்தேவ் சட்டவிரோதமாக பணம் பெறுவதை என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில் மட்டும் ஏழு கோடி ரூபாயை பிரிட்டனிலிருந்து கைப்பற்றியுள்ளது.

ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம், திவ்யா யோகா மந்திர் ஆகிய அறக்கட்டளைகளும் சட்டவிரோதமாக பணம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள லிட்டில் கம்ப்ரரே தீவிலுள்ள ராம்தேவின் உல்லாச பங்களா குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவையல்லாமல் இன்னபிற நாடுகளிலுள்ள ராம்தேவின் சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராம்தேவின் கட்டுப்பாட்டிலுள்ள 50 அறக்கட்டளைகளின் நடவடிக்கைகளும் விசாரணையிலிருந்து தப்பவில்லை.

ராம்தேவின் சட்டவிரோதமான கோடிக்கணக்கான ரூபாய் பணப்போக்குவரத்து குறித்து சமீபத்தில் ரிசர்வ் வங்கி என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் நான் சட்டவிரோதமாக ஒன்றும் செய்யவில்லை என்று ராம்தேவ் ஹரித்துவாரில் கூறினார்.

கடந்த 20 வருட பொதுவாழ்வில் தனக்கெதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தான் உரிய பதில்களைக் கூறி வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza