Thursday, September 22, 2011

லிபியா மீதான இராணுவ நடவடிக்கைகளை மேலும் 90 நாட்கள் நீட்டித்து​ள்ளது நேட்டோ

libya_nato_0325
வாஷிங்டன்:அமெரிக்கா தலைமையிலான வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு(NATO) தனது இராணுவ நடவடிக்கைகளை  லிபியாவில் மேலும் 90 நாட்கள் நீட்டித்துள்ளது.

‘ஆபரேஷன் யுனிஃபைட் ப்ரொடெக்டர் வெறும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது’ என புதன் கிழமை அன்று  பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தூதர்களின் வழக்கமான கூட்டத்திற்குப் பிறகு, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
 

வட ஆப்ரிக்காவில் கடற்படை ஆயுத தடை ஆணை மற்றும் விமானம் பறப்பதற்கான தடை ஆணை வரும் செப்டம்பர் 27ந்தேதி  முடிவடைகின்றது.

முஅம்மர் கடாஃபியின் ஆதரவு படைகள் எதிர்ப்பு காட்டும் வரையில் NATO-வின் போர் விமானங்கள் பறப்பதற்கு எந்தத் தடையுமில்லை என்று மேற்கத்திய தலைவர்கள் தங்கள் முடிவில் தெளிவாக உள்ளனர்.

மேற்கத்திய கூட்டுப்படைகள் லிபியாவில் தங்கள் அதிகாரத்தை நீட்டித்துள்ளதே தவிர அதன் நீட்டித்த அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று NATOவின் செயளாளர் ஜெனரல் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்மூஸன் கடந்த வாரம் DPAவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ‘சூழ்நிலை சரியாகிவிட்டால் எங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வோம்’ என்று தெரிவித்தார்.

நேட்டோவின் வான்வழி தாக்குதலால் லிபியாவின் உள்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. நேட்டோவின் விமான தாக்குதலால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மடிந்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza