Thursday, August 11, 2011

செங்கோட்டை தாக்குதல்:ஆரிஃபின் மரணத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது

arifinபுதுடெல்லி:செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தின் உறுப்பினர் என கருதப்படும் முஹம்மது அஷ்ஃபாக் என்ற ஆரிஃபின் மரணத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்துள்ளது.

2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நடந்த செங்கோட்டை தாக்குதல் வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் மரணத்தண்டனையை விதித்திருந்தது. இத்தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிச்செய்தது.


இந்நிலையில் இவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றமும் ஆரிஃபின் மரணத்தண்டனையை உறுதிச்செய்து தீர்ப்பளித்துள்ளது.

கொலை, தேசத்திற்கு எதிராக போர் செய்தல், குற்றகரமான சதித்திட்டம் ஆகியன ஆரிஃப் மீது சுமத்தப்பட்ட குற்றங்களாகும். ஆரிஃப் உள்பட மூன்று லஷ்கர் இயக்க உறுப்பினர்கள் செங்கோட்டையில் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் இறந்ததாக வழக்கு. தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் சுட்டுக்கொன்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza