Thursday, August 11, 2011

மாயாவதியின் மாளிகையை பராமரிக்க 20 கோடி ரூபாய்

untitledலக்னோ:கடந்த ஒரு வருடத்தில் தனது பங்களாவை பராமரிக்கும் பணிகளுக்காக அரசு கருவூலத்திலிருந்து உ.பி. முதல்வர் மாயாவதி செலவழித்தது 20 கோடி ரூபாயாகும். இதுபோதாது என மேலும் 2 கோடி ரூபாய் கோரிக்கையை வைத்துள்ளார் தலித் முதல்வர்.

முதல்வரின் அதிகாரப்பூர்வ வீட்டிலிருந்து சமீபத்தில் லக்னோ மால் அவன்யூவில் 13-ஆம் நம்பர் பங்களாவிற்கு மாயாவதி வசிப்பிடத்தை மாற்றினார். 13 அதிர்ஷ்ட நம்பர் என்பது மாயாவதியின் நம்பிக்கையாம்.


உத்தரபி‌ரதேச மாநில பட்ஜெட் கூட்டம் லக்னோவில் நடந்தது. இதில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பின்னர் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதற்கு பதில் அளித்து நடந்த விவாதத்தில் ,முதல்வர் மாயாவதியின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத மூன்று கார்கள், மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களின் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மொத்தம் ரூ.26 கோடியும், லக்னோவில் உள்ள மாயாவதியின் மாயா-கன்ஷிராம் நகர் எக்கோ பார்க் உள்ளிட்ட இரு சொகுசு பங்களாவை பராமரிப்பதற்காக ரூ.20 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவற்றை தவிர அம்பேத்கர்-கன்ஷிராம் நினைவு பூங்கா பராமரிப்பிற்காக கூடுதலாக ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza