Sunday, August 7, 2011

ரமலானிலும் சிரியாவில் ராணுவ நடவடிக்கை தொடர்கிறது

_54459743_012590594-1டமாஸ்கஸ்:பல நாட்களாக சிரியாவின் ஹமா நகரத்தில் தொடரும் ராணுவ நடவடிக்கைக்கு ரமாலானிலும் ஓய்வில்லை. கடந்த ஒருவாரத்தில் நடந்த ராணுவ தாக்குதல்களில் குறைந்தது 300 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ரமலானின் முதல் வெள்ளிக்கிழமை அன்று கொடுங்கோல் ஆட்சிபுரியும் பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டும் சிரியாவில் 24 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என அல்ஜஸீரா கூறுகிறது.


வெள்ளிக்கிழமை தலைநகரான டமாஸ்கஸிற்கு அருகே இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தைர்ஸோரில் 30 ஆயிரம் பேர் திரண்ட பேரணியின் மீதும் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதாக பிரபல செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஹமாவில் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட ராணுவம் அப்பகுதியில் தகவல் தொடர்பு மற்றும் மின்சார கட்டமைப்புகளையெல்லாம் தகர்த்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza