Sunday, August 7, 2011

சோமாலியா:அல்ஷபாப் போராளி இயக்கம் மொகாதிஷுவிலிருந்து வாபஸ்



imagesCAJ27B1Fமொகாதிஷு:சோமாலியாவின் போராளி இயக்கமான அல் ஷபாப் தலைநகரான மொகாதிஷுவிலிருந்து வாபஸ் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ட்ரக்குகளில் ஏறி இவ்வியக்கத்தினர் வெளியேறியதாக அரசு செய்தித்தொடர்பாளர் அப்துற்றஹ்மான் உமர் உஸ்மான் அறிவித்துள்ளார். இப்பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். இப்பகுதியிலிருந்து வெளியேறிய சிவிலியன்கள் திரும்பி வர அரசு அழைப்புவிடுத்துள்ளது.

அல் ஷபாப் மொகாதிஷுவிலிருந்து வாபஸ் பெற்றதை தொடர்ந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மொகாதிஷுவில் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. அதேவேளையில், தெற்கு சோமாலியாவிலிருந்து தாங்கள் வெளியேறமாட்டோம் என அல்ஷபாபின் செய்தி தொடர்பாளர் அலி முஹம்மது ராகே தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza