புதுடெல்லி:மும்பையில் அண்மையில் நடந்து குண்டுவெடிப்பில் தீவிரவாதிகள் உபயோகித்த ஸ்கூட்டரை திருடியவரை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கைது செய்துள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் கைதுச் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை 13-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை மந்தகதியில் இருக்கும் வேளையில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் குண்டுவெடிப்பை நிகழ்த்திய கும்பலை குறித்து திருடியவருக்கு தெரியாது என அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கூட்டரின் உரிமையாளரிடம் பாதுகாப்பு ஏஜன்சிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தன. ஜவேரி பஸாரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு வெகு அருகிலிருந்து போலீஸ் ஸ்கூட்டரை கண்டுபிடித்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment