புதுடெல்லி:சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன் போன்ற அமைப்புகளைப் போலவே வலதுசாரித் தீவிரவாதக் குழுக்களும் ஆபத்து நிறைந்தவையாகும். எனவே வலதுசாரித் தீவிரவாத்துக்கு எதிராகவும் உறுதியுடனும் அச்சப்படாமலும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
“இந்தியன் முஜாகிதீன் தனக்குத் தானே எதிரி’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் புதன்கிழமை அவர் பேசியது:
வலதுசாரித் தீவிரவாதமும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உள்நாட்டு எதிரியுமாகும். அதை எதிர்நோக்கும் வகையில் உளவுப் பணிகளைப் பாதுகாப்புப் படையினர் வலுப்படுத்த வேண்டும். அவ்வாறான தீவிரவாதம் உருவாகக் காரணமானவற்றைக் கண்டறிந்து அவற்றைக் களைய பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தங்கள் இயக்கத்தில் சேர்க்க அனைத்துத் தீவிரவாத அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன.
பல கட்டங்களில் எதிரிகளை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிவதில்லை. எனவே சாதாரண மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.
0 கருத்துரைகள்:
Post a Comment