ராமல்லா:ஆக்கிரமிப்பு மேற்குகரையில் அகதி முகாமில் இரண்டு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. 23 வயது மற்றும் 25 வயதுடைய இளைஞர்களின் தலையிலும், அடிவயிறிலும் குண்டு பாய்ந்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் ஐ.நா மாநாட்டில் சுதந்திர ஃபலஸ்தீன் அரசுக்கான கோரிக்கையை முன்வைக்க இருக்கவே, இம்முயற்சியை தோல்வியடைய செய்வதற்கான இஸ்ரேலின் முயற்சியின் ஒரு பகுதியாகும் இத்தாக்குதல் என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment