Sunday, July 10, 2011

தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி-ஈரான்

BRIG GEN amir-ali
டெஹ்ரான்:ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க விமானங்கள் மீது கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என ஈரானின் புரட்சி படையின் மூத்த தலைவர் ஆமிர் அலிஹாஜி ஸாதஹ் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சட்டங்களை புறக்கணித்து ஈரான் அணு ஆயுதங்களை சோதனை நடத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை ஆமிர் அலி ஹாஜி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த பெப்ருவரி மாதம் ஈரான் பெருமளவில் ஏவுகணை சோதனைகளை ரகசியமாக நடத்தியதாக அலிஹாஜி தெரிவித்தார். இந்த ஏவுகணைகளால் வளைகுடாவின் தெற்குபகுதியின் இறுதி வரை செல்வதற்கு சக்தியுள்ளது என அவர் கூறினார். மேற்கத்திய நாடுகளோ, இஸ்ரேலோ தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் பல தடவை எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணுவ பலத்தை அதிகரித்துள்ளதை தெரியப்படுத்த நடத்திய ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து ஈரான் கமாண்டர் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza