Tuesday, July 12, 2011

ஸ்ரெப்ரெனிகா:நடுங்கவைக்கும் நினைவுகள்

srebrenica massacre
சரஜிவோ:16 ஆண்டுகளுக்கு பிறகும் போஸ்னியா முஸ்லிம்களுக்கு ஸ்ரெப்ரெனிகாவின் நடுங்கும் நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை. 1992-95 காலக்கட்டத்தில் நடந்த போஸ்னியா முஸ்லிம் இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தை செர்பியாவின் இனவெறிப்பிடித்த ராணுவம் நிறைவேற்றியது ஸ்ரெப்ரெனிகாவின் 8000க்கும் அதிகமான முஸ்லிம்களை கூட்டாக படுகொலை செய்தபிறகாகும். இரண்டாவது உலகப்போருக்கு பிறகு ஐரோப்பிய மண்ணில் நிகழ்ந்த மிகப்பெரிய கூட்டுப்படுகொலையாகும்.

1995 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நகரத்தை சுற்றிவளைத்த செர்பியாவின் வெறிப்பிடித்த ராணுவம் ஆண்களையும், ஆண்குழந்தைகளையும் தேடிப்பிடித்து கொலைச்செய்தனர்.ஒரு லட்சம் பேர் போஸ்னியா முஸ்லிம் இனப்படுகொலையில் கொலைச்செய்யப்பட்டனர்.சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிகா சம்பவத்தின் பயங்கரத்தை கடந்த ஆண்டு அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கூட்டுக்கல்லறை வெளிக்கொணர்ந்தது.அங்கு கிடைத்த உடல்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 613 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டனர்.

 ஸ்ரெப்ரெனிகாவில் உயிரோடு வாழ்ந்த நபர்களின் இரத்த மாதிரிகளுடன் ஒப்பீடுச்செய்து ஃபாரன்சிக் வல்லுநர்கள் உடல்களை அடையாளம் கண்டனர். இனப்படுகொலை நிகழ்ந்து 16-வது ஆண்டு நினைவு தினத்தில் ஸ்ரெப்ரெனிகாவுக்கு அருகில் உள்ள போட்டோக்கரியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரெப்ரெனிகா கூட்டுப்படுகொலையின் உண்மையை செர்பியா மக்கள் இப்பொழுதும் புரிந்துக்கொள்ளவில்லை என பாகிர் இஸ்ஸத் பெகோவிச் தெரிவித்துள்ளார். போஸ்னியாவின் அதிபராக பதவி வகித்த அலிஜா இஸ்ஸத் பெகோவிச்சின் மகன் தான் பாகிர். முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த ராதோவான் கராஜிச் மற்றும் ராத்கோ ம்லாடிச் ஆகியோரை வீரநாயகர்களாக கருதும் செர்பிய மக்கள் உண்மையை புரிந்துக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். சமீபத்தில் கைதுச்செய்யப்பட்ட ம்லாடிச் மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza