Wednesday, July 6, 2011

பழங்குடியின மக்களுக்கு துரோகம் இழைக்கும் மோடி அரசு மீது மனித உரிமை கமிஷன் கோபம்

crime against dalits
புதுடெல்லி:நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு மரணித்த கல் உடைக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றிய 238 பழங்குடியின தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தயங்கி வரும் குஜராத் மோடி அரசு மீது தேசிய மனித உரிமை கமிஷன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. ஆறுவாரங்களுக்குள் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஆலிராஜ்பூர், ஜாபூவ மாவட்டங்களை சார்ந்த பழங்குடியின மக்கள் குஜராத் மாநிலத்தின் கேதா, பஞ்சமஹல் ஆகிய இடங்களிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்தனர். அவ்வேளையில் தான் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு 238 பேர் மரணமடைந்தனர்.

தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு 1984-ஆம் ஆண்டைய இ.எஸ்.ஐ சட்டத்தின்படியும் 1923-ஆம் ஆண்டு தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கலாம் என குஜராத் அரசு கூறியதை தேசிய மனித உரிமை கமிஷன் நிராகரித்துவிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza