ஓஸ்லோ:நார்வே கூட்டுப் படுகொலையை நடத்திய வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது இயக்கத்தின் யூனிஃபார்மில் அணியக்கூடிய பாட்ஜின் வடிவமைப்பை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து பெற்றுள்ளான்.
கடந்த ஆண்டு நார்வேயை சார்ந்த ஒருவருக்கு சாம்பிள்கள் அனுப்பிக் கொடுத்ததாக இந்தியன் ஆர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்லம் அன்ஸாரி கூறியுள்ளார். இஸ்லாம், கம்யூனிசம், நாசிஸம் ஆகியவற்றை குறிப்பிட பிறை நட்சத்திரம், சுத்தியல் அரிவாள், ஸ்வஸ்திக் ஆகிய சின்னங்களை நெற்றியில் அடையாளப்படுத்திய ஒரு மண்டை ஓட்டில் பொருத்திய சிலுவையில் கடாரி கத்தி குத்தியிருக்கும் வகையில் பாட்ஜ் அமைந்துள்ளது.
மின்னஞ்சல் வழியாக தொடர்புக்கொண்ட ஒருவருக்கு இரண்டு மாதிரிகளை கொரியர் மூலமாக அஸ்லம் அன்சாரி அனுப்பிக்கொடுத்துள்ளார். பெரும் ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனுப்பிக் கொடுத்ததாகவும், பதில் வரவில்லை எனவும் அன்ஸாரி கூறுகிறார்.
0 கருத்துரைகள்:
Post a Comment