திரிபோலி:லிபியாவின் கிழக்கு நகரமான ஸ்லிதானில் உணவு கிடங்கிலும், சுகாதார மையத்திலும் நேட்டோ படை குண்டுவீசி தாக்கியுள்ளது. இதில் எட்டுபேர் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ராணுவ மையங்களில் தாக்குதல் நடத்தியதாக நேட்டோ கூறுகிறது.
கத்தாஃபி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரிபோலிக்கும், எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மிஸ்ரத்தாவுக்கும் இடையே உள்ள நகரம்தான் ஸ்லிதான்.
கத்தாஃபி பதவி விலகும் வரை தீவிர தாக்குதல் நடத்தப்படும் என நேட்டோ ராணுவத் தலைவர் கூறியுள்ளார்.
தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த லிபியாவின் ஐ.நா பிரதிநிதி அப்துல் இலாஹ் அல் காதிபும் எதிர்ப்பாளர்கள் கவுன்சிலும் பெங்காசியில் சந்திப்பை நிகழ்த்தினர்.
அரசு வட்டாரங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், சிறப்பு திட்டத்தை அடிப்படையாக கொள்ளாமல் அரசியல் தீர்வு காண்பதற்கான வழிகள் ஆராய்வதுதான் நோக்கம் என காதிப் தெரிவித்துள்ளார்.
கத்தாஃபி நாட்டைவிட்டு வெளியேறாமல் பதவி விலகும் திட்டத்தை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் முன்வைத்துள்ளார். கத்தாஃபி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை பிரிட்டன் முன்வைத்துள்ளது. ஆனால், கத்தாஃபி நாட்டை விட்டு வெளியேறுவதுதான் முன்னுரை என பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பியுடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.
ரமலான் மாதத்தில் தாக்குதல் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதேவேளையில் லிபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் ஒபீதி எகிப்தில் 3 தின பேச்சுவார்த்தைக்கு பிறகு நாட்டிற்கு திரும்பினார். பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அவர் எகிப்திற்கு சென்றார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment