Wednesday, July 27, 2011

பாரபட்சமான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

IMG_2196புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்புக் குறித்த விசாரணையில் முஸ்லிம் அமைப்புகளை மட்டும் குறிவைக்காமல் ஹிந்துத்துவா அமைப்புகள் உள்பட அனைத்து சாத்தியக் கூறுகளை குறித்தும் விசாரணை நடத்தவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர்கள் கலந்துக்கொண்ட இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மும்பை குண்டுவெடிப்பின் திரைமறைவில் போலீஸாரை போலியாக மேற்கோள்காட்டியோ அல்லாமலோ சில ஊடகங்கள் நடத்தும் பொய்ப் பிரச்சாரங்கள் கண்டிக்கத்தக்கது. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு பங்கிருப்பதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிராக ப்ரஸ் கவுன்சிலுக்கு புகார் அளிப்பதுடன் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

கர்நாடகா மாநிலத்தில் நடந்த சில குற்றச் செயல்களுடன் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்புபடுத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கையில் கூட்டம் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறது. இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களின் மூலமாக ஊழல் மற்றும் மோசமான ஆட்சி நிர்வாகத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இயலாது என பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை விடுக்கிறது.

சங்க்பரிவாரின் ஊழல், ஜாதீய அரசியலுக்கு எதிராக மதசார்பற்ற அமைப்புகளின் ஆதரவுடன் பாப்புலர் ஃப்ரண்டின் போராட்டம் தொடரும். தேர்தல் ஆதாயங்களுக்கான அரசியல் விளையாட்டை நிறுத்திவிட்டு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கான தெளிவான ஃபார்முலாவை கொண்டுவருவதற்கு அரசும், மதசார்பற்ற அரசியல் கட்சிகளும் தயாராகவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட்டின் இக்கூட்டம் கோரிக்கை விடுக்கிறது.

இக்கூட்டத்தில் ஆல் இந்தியா கிறிஸ்தியன் கவுன்சிலின் பொதுச் செயலாளரும், தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினருமான டாக்டர்.ஜான் தயாள் வகுப்புக் கலவரத்தடுப்பு மசோதாவின் வரைவுக்குறித்து விளக்க உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, பொதுச் செயலாள்ர் கெ.எம்.ஷெரீஃப், பல்வேறு மாநில பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza