புதுடெல்லி:தற்போது சர்தார் படேல் உயிருடன் இருப்பின் தற்போதைய பிஜேபி தலைவர்களான அத்வானி, மோடி போன்றோர் தலைமை பொறுப்பில் இருந்திருக்க முடியாது என்றும் இவர்களால் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை செய்திருக்க முடியாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
முன்னதாக சர்தார் வல்லபாய் படேல் உயிருடன் இருந்திருந்தால் தீவிரவாத செயல்களால் மக்கள் உயிர்களை இழந்திருக்க மாட்டார்கள் என்று குஜராத்தில் இனப்படுகொலையின் மூலம் பல முஸ்லிம் மக்களின் உயிர்களை குடித்த மோடி கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹ்மத் கூறுகையில் சர்தார் படேல் உயிருடன் இருந்திருப்பின் அத்வானியோ, மோடியோ தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது என்றும் மதச்சாயம் பூசிக்கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்க முடிந்திருக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சங்கப்பரிவார்களின் தொடர்பை நிராகரிக்க முடியாது என்ற திக்விஜய் சிங்கின் கூற்றிற்கு பதில் அளித்த ஷகீல் அஹ்மத் யாரை விசாரணையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் யாரை சேர்த்துக்கொள்ள கூடாது என்று புலனாய்வுத் துறையே முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment