வாஷிங்டன்:பல தலைமுறைகளாக வாசிப்பு கலாச்சாரத்தை ஊட்டிய ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை விற்பனைக்கு தயாராக உள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த இப்பத்திரிகை அண்மையில் கடனில் சிக்கி திவால் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. ஏறத்தாழ ஆயிரம் பதிப்புகளை வெளியிட்டுள்ள இதுவரை வெளியிட்டுள்ள வெளியீட்டு நிறுவனம் விற்பனைக்கான நடவடிக்கைகளுக்காக நிபுணர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. விற்பனையின் மூலம் 100 கோடி டாலர்(கிட்டத்தட்ட 4700 கோடி ரூபாய்) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
220 கோடி டாலர் கடன் சுமையில் இந்நிறுவனம் சிக்கியுள்ளது.அதேவேளையில் நிறுவனத்தின் சில சொத்துக்களை விற்பதன் வாயிலாக வெளியீட்டு நிறுவனத்தை விற்பதை தவிர்க்கலாம் என்பதற்கான முயற்சி நடக்கிறது.
1992-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வாலஸ் குடும்பம் ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியீட்டை துவக்கியது.சட்டைப்பையில் பாதுகாக்கும் அளவில் முதன் முதலில் வெளியிடப்பட்ட இப்பத்திரிகை வெகுவிரைவில் பெரும் மக்கள் ஆதரவை பெற்றது. துவக்கத்தில் இதர பத்திரிகைகளில் வரும் சிறந்த ஆக்கங்கள் ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளியிடப்பட்டது.
தாமதிக்காமல் உலகம் முழுவதுமாக மாதந்தோறும் 1.8 கோடி பிரதிகள் விற்பனையை எட்டிப்பிடித்தது.இத்துடன் நிறுவனம் பெரும் லாபத்தை சம்பாதித்தது.ஆனால் இந்த லாபத்தின் ஒரு பகுதியை வாலஸ் குடும்பம் நன்கொடையாக அளித்தது என கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment