புதுடெல்லி:பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை விசாலமாக்கவும், வலுப்படுத்தவும் இந்தியா-அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளன. 3 தினங்கள் கொண்ட இந்திய பயணத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய பேச்சுவார்த்தையில் இது முடிவானது.
பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை அளிப்போம் என கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடத்திய ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஹிலாரி தெரிவித்தார்.
இந்தியாவை அணுசக்தி பரவல் குழுவில் உட்படுத்துவதை அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.மும்பைகுண்டுவெடிப்பில் இந்தியாவின் உணர்வை அமெரிக்கா புரிந்துக்கொண்டதாக ஹிலாரி தெரிவித்தார். கூடுதல் கடமை உணர்வுடன் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த பாகிஸ்தானிடம் வற்புறுத்தப்படும் என ஹிலாரி தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலின் காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுடன் நிலவும் பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண முயல்வோம். அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை அளிப்பது தடைச்செய்துள்ள வழிகாட்டுதல் வரைவு குறித்து இந்தியாவின் கவலையை ஹிலாரி நிராகரித்தார். இந்தியாவுடன் ராணுவம் அல்லாத அணுசக்திதுறையில் ஒத்துழைப்பை உறுதிச்செய்வோம் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஹிலாரி இன்று சென்னைக்கு வருகை தருவார்.
0 கருத்துரைகள்:
Post a Comment