Thursday, July 28, 2011

ஸல்வாஜுதூம்:உச்சநீதிமன்ற உத்தரவு மாவோயிஸ்ட் வேட்டையை பாதிக்கும் – சிதம்பரத்தின் ஆதங்கம்

CHIDAMBARAM_ADDRESSI_10804fபுதுடெல்லி:ஸல்வாஜுதூம் படையை கலைத்துவிடவேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது:

இப்பிரச்சனையில் புதிய சட்டத்தை அமுலாக்க சட்டீஷ்கர் அரசு முயற்சி எடுத்துவரும் சூழலில் ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் மாநில முதல்வர்களின் கூட்டத்திற்கு அழைப்புவிட மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.


மேற்குவங்காள மாநிலம் ஜங்கல்மஹலில் மாவோயிஸ்டுகள் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து மேற்குவங்க மாநில அரசு உஷாராக இருக்க எச்சரிக்கை அனுப்பியுள்ளோம். நக்ஸலைட்டுகளுக்கு எதிரான போரில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் உறுதியாக நம்புகிறார்.

சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில்தான் சல்வா ஜுடும் ஆயுதக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநில அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாவோயிஸ்ட்டுகளிடம் மென்மையாக நடந்துகொள்கிறார் போன்ற அடிப்படையில்லாத யூகங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதுபோன்றே, திரிணமூல் காங்கிரûஸ மாவோயிஸ்ட்டுகள் ஆதரிக்கிறார்கள் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கு வங்க அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதல் துணை ராணுவ படையை அங்கு அனுப்ப உள்ளோம். 50 அல்லது அதற்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகளை சிறையில் இருந்து விடுதலை செய்யப் போவதாகவும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza