Friday, July 1, 2011

புரூலியா:கிம் டேவியை ஒப்படைக்கமாட்டோம்-டென்மார்க் நீதிமன்றம்

kim devi
புதுடெல்லி:மேற்குவங்காள மாநிலம் புரூலியாவில் ஆயுதங்களை கொட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியான கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்கமாட்டோம் என டென்மார்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது. டேவியை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி டென்மார்க் அரசு அளித்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்தியாவில் நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறை சித்திரவதைகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கிம்டேவியை ஒப்படைக்க கூடாது என உத்தரவிட்டது. டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கூடாது என கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டென்மார்க் அரசு உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.

இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ கிம் டேவிக்கு மரணத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு சலுகைகளை டென்மார்க் அதிகாரிகளிடம் உறுதியளித்திருந்தது.நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கவில்லை என சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இதுக்கிடைத்தவுடன் டென்மார்க்கின் உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக அறிவித்துள்ளது சி.பி.ஐ.

1995-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி கிம் டேவியின் தலைமையிலான கும்பல் புரூலியாவில் ஒரு கார்கோ விமானத்திலிருந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், க்ரேனேடுகள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட ஏராளமான ஆயுதங்களை கொட்டியது.இவ்வழக்கில் கைதுச்செய்யப்பட்ட ஐந்து லாட்வியா குடிமகன்களும், பிரிட்டனைச்சார்ந்த பீட்டர் ப்ளீச்சும் முன்னரே விடுதலைச்செய்யப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியான கிம்டேவி இந்தியாவிலிருந்து தப்பி சென்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza