Friday, July 1, 2011

சவூதி:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய ‘மேன்மையான குடும்பம் மேன்மையான சமூகம்’ நிகழ்ச்சி

india fraternity forum
தம்மாம்:சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வுக்காக உழைத்திடும் இந்தியா ஃபெடர்னி ஃபாரம் தம்மாம் கிளை தமிழ்நாடு பிரிவு சார்பாக ’மேன்மையான குடும்பம் மேன்மையான சமூகம்’ நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்தேறியது.
தம்மாம் நஹ்த் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் ’சுய புனரமைப்பு’ என்ற தலைப்பில் சகோதரர்.ஸாதிக் மீரான் உரைநிகழ்த்தினார். தன்னைத்தானே புனரமைப்பதன் மூலமே ஒருவரால் தனது குடும்பத்தின் மாற்றத்திற்கு தலைமை வகிக்க முடியும் என சகோதரர்.மக்தூம் நைனா அவர்கள் ‘குடும்பத்தை புனரமைத்தல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

குடும்பத்தை புனரமைத்தன் மூலம் ஓர் உன்னதமான சமூகத்தை கட்டியெழுப்ப இயலவில்லை எனில் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என ‘சமூகத்தை புனரமைத்தல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய சகோதரர்.ரியாஸ் அஹ்மத் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza