Thursday, July 14, 2011

பாலிவுட் திரைப்படங்கள் இளைய தலைமுறையினரை புகைப்பிடிக்க தூண்டுகின்றன-ஆய்வில் தகவல்

531f8643f00fda96f19f607303dc-medium
புதுடெல்லி:பாலிவுட் திரைப்பட நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறுவது இளம் தலைமுறையினர் இந்த மோசமான பழக்கத்திற்கு தூண்டுகோலாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள்தாம் இதனை ஒருமுறையாவது உபயோகித்து பார்ப்போமே! என்று விரும்புவதாகவும் பின்னர் அவர்கள் புகைக்கு அடிமையாக மாறுவதாகவும் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜெர்னல் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு 12 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையேயான 3956 சிறுவர்களிடம் நடத்தப்பட்டது. புதுடெல்லியில் 12 பள்ளிக்கூடங்களில் இருந்து தேர்வுச்செய்யப்பட்ட மாணவர்களை 2009-ஆம் ஆண்டுமுதல் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். ’பாலிவுட் திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளும் இளையதலைமுறையின் புகைப்பிடிக்கும் பழக்கமும்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சிறுமிகளை விட சிறுவர்கள்தாம் திரைப்படத்தை பார்த்து போதையூட்டும் பொருட்களை பயன்படுத்த துவங்குகின்றனர் என ஹெல்த் ப்ரமோஷன் அண்ட் டொபாக்கோ கண்ட்ரோல் தலைவர் டாக்டர்.மோனிக்கா அரோரா தெரிவிக்கிறார்.

டாக்டர் கவுரங் நாஸர் இந்த ஆய்விற்கு தலைமை வகித்தார். புகையிலை நிறுவனங்களின் சின்னங்களை பதித்துள்ள ஆடைகளையும் இதரப்பொருட்களையும் உபயோகிக்க விரும்புபவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza