ஸ்ரீநகர்:மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜம்மு கஷ்மீரின் க்ராண்ட் முஃப்தி மெளலவி பஷீருத்தீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியதாவது:மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாத செயலாகும். அது மனிதத்தன்மைக்கு விரோதமானது.இத்தகைய சம்பவங்களை எவ்வளவு கண்டித்தாலும் போதாது. நிரபராதிகளின் உயிரை பறிக்கும் இத்தகைய செயல்களை தடுக்க சமூகத்தின் பல்வேறு துறைகளைச்சார்ந்தவர்கள் முயலவேண்டும்.
சூதாட்டம், விபச்சாரம் போன்ற மோசமான செயல்கள் கஷ்மீரில் நடைபெறுகிறது. ஆனால் இதற்கெதிராக போலீஸ் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. போலீஸ் செயலிழந்துள்ளது ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது. கஷ்மீரிகளின் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத இத்தகைய மோசமான செயல்களை முடிவுக்கு கொண்டுவர அணிதிரளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment