டெல்அவீவ்:ஜெருசலத்தில் முஸ்லிம்களின் மாமூன் அல்லா அடக்கஸ்தலத்தில் சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.அருங்காட்சியகம் கட்டுவது அடக்கஸ்தலத்தின் பரிசுத்தத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் என ஃபலஸ்தீன் மக்களும், சில இஸ்ரேலியர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
அருங்காட்சியகம் கட்டுவதற்கு நிலத்தை தோண்ட உள்துறை அமைச்சகத்தின் மாவட்ட ப்ளானிங் கமிட்டி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதனை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஃப்ராத் ஆர்பச் எ.எஃப்.பியிடம் தெரிவித்துள்ளார். கட்டிடம் கட்ட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது வழங்கிய அனுமதி பணியை துவக்குவதற்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment