Thursday, July 14, 2011

ஊடக உலகின் சக்ரவர்த்தி ‘மர்டோக்’ பதவி விலகுகிறார்

murdoch
லண்டன்:ஊடக உலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த ரூபர்ட் மர்டோக் ‘நியூஸ் கார்ப்பரேசன்’ தலைமைப்பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும் மிக்காயல் வூல்ப் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளை கிளப்பிய போன் ஹேக்கிங் சம்பவம் தொடர்பாக மர்டோக்கின் டாப்லாய்ட் நாளிதழான ‘நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ இழுத்து மூடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நியூஸ் கார்ப்பரேசன் தலைமை பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மர்டோக் என்ற பெயரைக்கொண்டவர்களெல்லாம் லண்டனில் தற்பொழுது சந்தேகத்தின் நிழலில் இருப்பதாக மிக்காயல் வூல்ப் பி.பி.சியின் கரண்ட் அஃபயர்ஸ் நிகழ்ச்சிக்கு அனுமதித்த நேர்முகத்தில் தெரிவித்துள்ளார். ஒரு அமெரிக்க மாத இதழின் எடிட்டரான மிக்காயல் மர்டோக்கையும், அவரது குடும்பத்தினரையும் 50 மணிநேரம் இண்டர்வியூ செய்து வாழ்க்கை வரலாற்றை எழுத தேவையான ஆவணங்களை திரட்டினார்.

பிரபலங்கள் உள்பட ஏராளமானோரின் தொலைபேசி உரையாடல்களை ’நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ ஒட்டுக்கேட்டது. அதுமட்டுமல்ல 13 வயது சிறுமியின் வாய்ஸ் மெயிலை இந்த டாப்லாய்ட் பத்திரிகையின் செய்தியாளர்கள் அழித்துவிட்டு சிறுமி தற்பொழுது உயிரோடு இருப்பதாக பெற்றோரை நம்பவைத்தனர். இதனைத் தொடர்ந்து விளம்பரதாரர்கள் ’நியூஸ் ஆஃப் த வேர்ல்டி’ற்கு விளம்பரம் அளிக்க தயங்கினர். மக்களின் கோபம் இப்பத்திரிகையின் மீது திரும்பியதைத் தொடர்ந்து 168 வருடகால பழமையான பத்திரிகை இழுத்து மூடப்பட்டது.

பிறரின் அந்தரங்க விவகாரங்களில் அத்துமீறி நுழைந்து தகவல்களை சேகரிக்கும் மர்டோக்கின் நடவடிக்கையை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கார்டன் ப்ரவுன் கண்டித்திருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza