Monday, July 11, 2011

நெருக்கடி நிலையை சமாளிக்க சிரியாவில் தேசிய அளவிலான பேச்சுவார்த்தை துவங்கியது

 

Members of the Dialogue Committee set up by the government and the Syrian Vice-President take part in a two-day national dialogue in Damascus
டமாஸ்கஸ்:நாடு சந்திக்கும் நெருக்கடியை சமாளிக்க சிரிய அரசு ஆளுங்கட்சியான பாத் கட்சியுடனும் எதிர்கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. புதிய ஊடக சட்டம், பல்வேறு கட்சிகள் கலந்து கொள்ளும் தேர்தல் உள்ளிட்ட சாத்தியமாகும் சீர்திருத்தங்கள் தொடர்பாக இரண்டு தின பேச்சுவார்த்தை துவங்கியது.

ஆனால், அரசு எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் இப்பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளனர். சிரியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய அரசு எதிர்ப்பு போராட்டத்தில் 350 ராணுவ வீரர்கள் உள்பட 1750 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரம் கூறுகிறது.

பாத் கட்சி தலைவர்கள், எதிர்கட்சியினர், சுயேட்சைகள், வழக்கறிஞர்கள், இளைஞர் இயக்க தலைவர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என அரசு அறிவித்துள்ளது. பிரச்சனைகளை விவாதிக்க முழுமையான நடவடிக்கைகள் தேவை என அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

எதிர்கட்சிகளின் பங்களிப்பை பொறுத்தே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். போராட்டம் தீவிரமடைந்துவரும் ஹமாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தூதர்கள் சென்றிருந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza