Saturday, July 16, 2011

ஒரிஸ்ஸா:போலீஸ் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

புவனேஷ்வர்:ஒரிஸ்ஸா மாநிலம் கன்ஜாம் மாவட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் மரணமடைந்தனர். நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களை கலைத்து விட போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

ஜூலை 13-ஆம் தேதி இப்பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மூன்று தினங்களாக சாலையில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களை கலைக்க முயன்ற போலீசார் மீது கல்லையும், குண்டுகளையும் உபயோகித்து தாக்குதல் நடத்தியதாக போலீஸ் கூறுகிறது.

இதனைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் மக்கள் காயமடைந்ததாக தெற்கு பிராந்திய டி.ஐ.ஜி ஆர்.கே.சர்மா கூறியுள்ளார். மோதலில் எட்டு போலீஸார் காயமடைந்ததாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் டி.ஜ.ஜி தெரிவித்துள்ளார்.

மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நவீன்பட்நாயக் இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். சம்பவத்தை குறித்து விசாரணை நடத்த எ.டி.ஜி.பி சஞ்சீவ் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza