திரிபோலி:லிபியாவின் எண்ணெய் நகரமான ப்ரிகாவில் கர்னல் முஅம்மர் கத்தாஃபியின் படையினருக்கும், அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சில தினங்களாக இந்நகரத்தின் பல பகுதிகள் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் எதிர்ப்பாளர்களின் கொடியின் வண்ணத்திலான ஆடை அணிந்து வந்த கத்தாஃபியின் ராணுவத்தினர் தாக்குதலை தொடுத்தனர். இத்தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் முக்கிய பொருளாதார உறைவிடமான ப்ரிகாவை என்ன விலை கொடுத்தும் பாதுகாப்போம் என அஸீஸியா நகரத்தின் தமது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் ஒலிபரப்பப்பட்ட உரையில் கத்தாஃபி தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment