Friday, July 22, 2011

கேரளா:அருந்ததி ராய்க்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க குண்டர்கள்

arundhati_roy
திருச்சூர்(கேரளா):கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த சங்க்பரிவார குண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சூரில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வருகைத்தந்தார் அருந்ததிராய். அவருக்கு எதிராக பா.ஜ.க பாசிச குண்டர்கள்  கறுத்த முகமூடி அணிந்துக்கொண்டு  ’வெளியே போ(கோ பேக்)’ என கோஷம் எழுப்பினர். பா.ஜ.க போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பேராசிரியர் ஸாரா ஜோசப்புடன் அரங்கிற்கு வரும்பொழுது பா.ஜ.கவினர்’ கஷ்மீர் இந்தியாவின் தலைப்பாகை’ என எழுதிய போர்டுகளுடன் வந்த பா.ஜ.கவினர் ‘தீவிரவாதிகளுக்கு ஓஸானா பாடலை பாடும் அருந்ததியே வெளியேறு’ என கோஷமிட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza