Friday, July 15, 2011

லிபியா:நேட்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை 1100

child-injured-by-us-nato-bombing
திரிபோலி:கத்தாஃபியின் அரசை வீழ்த்தப்போகிறோம், அரசு எதிராக போராடும் எதிர்ப்பாளர்களுக்கு உதவப்போகிறோம் என கூறி நேட்டோ படையினர் நடத்திவரும் விமானத்தாக்குதலில் இதுவரை 1100 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

மனித படுகொலைகளை செய்துவரும் நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டேர்ஸ் ரஸ்மூஸனை போர்க்குற்றத்திற்காக லிபியாவின் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் என லிபியாவின் அரசுதரப்பு வழக்கறிஞர் முஹம்மது ஸக்ரி மஹ்ஜூபி வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நிராயுதபாணிகளான இவ்வளவு மக்களையும் கொலைச்செய்தது ரஸ்மூஸன் ஆவார்.திரிபோலியிலும், இதர பகுதிகளிலும் நேட்டோ நடத்திய தாக்குதலில் 4537 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் எண்ணெய் வளத்தை குறி வைத்து வெளிநாட்டு ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. கத்தாஃபியை கொலைச்செய்யவேண்டும் என கோரிக்கைவிடுத்த ரஸ்மூஸனுக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் என மஹ்ஜூபி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் லிபியாவின் விவகாரத்தை குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளார். நேற்று துருக்கிக்கு புறப்பட்ட அவர் 40க்கும் அதிகமான நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இஸ்தான்புல் கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை க்ரீஸிற்கு செல்வார். அதனைத்தொடர்ந்து இந்தியா, இந்தோனேஷியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza