பாபா ராம்தேவ் ஒரு வியாபாரியேத் தவிர சன்னியாசி இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார். யோகாவை பயிற்றுவிக்கும்போதே முன் வரிசையில் உள்ளவர்களுக்கு ரூ 50000 , அடுத்த வரிசையில் உள்ளவர்களுக்கு ரூ30000 , கடைசி வரியில் உள்ளவர்களுக்கு ரூ1000 வசூல் செய்வது வியாபாரம் அல்லாமல் வேறு என்ன என திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராம்தேவைக் கண்டு காங்கிரஸ் அஞ்சவில்லை என்றும் அவ்வாறு அஞ்சியிருந்தால் ராம்தேவ் சிறைச்சாலையில் அல்லவா இருந்திருப்பார் என்று குறிப்பிட்ட திக்விஜய் சிங் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.உண்ணாவிரதம் இருப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது, கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து விட முடியாது என்றும் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தனது பிடிவாதமான நிலையை விட்டு விட வேண்டும் என சிங் கூறினார்.பாபா ராம்தேவ் ஊழலுக்கெதிராக வரும் சனிக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ராம்தேவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நான்கு மூத்த அமைச்சர்களை அரசு அனுப்பியுள்ளது. நேற்று பாபா ராம்தேவ், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல்,பவன் குமார் பன்சால் மற்றும் சுபோத் காந்த் ஷகாய் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment